நாடோடிகள்’ படத்தில் அறிமுகமான அனன்யாவுக்கு, அதன்பின் நடித்த, ‘எங்கேயும் எப்போதும்’ படமும் திருப்புமுனையாக அமைந்தது. இருப்பினும், பைனான்சியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். இதையடுத்து, படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இப்போது, சிறிய இடைவெளிக்கு பின், மீண்டும் வெள்ளித் திரைக்கு அடி எடுத்து வைத்துள்ளார், அனன்யா. தற்போது, ஒரு மலையாள படத்தில் நடித்து வரும் அனன்யாவுக்கு, தமிழிலும், ‘அங்காடி தெரு’ மகேஷ் நடிக்கும் படத்தில் ஹீரோயின் வேடம் கிடைத்து உள்ளது. அதுவும், கல்லூரி மாணவி வேடமாம். அதனால், இப்படத்துக்காக, ஒரு ரூபாய் மட்டுமே, அட்வான்சாக வாங்கி, நடிக்க துவங்கி விட்டார் அனன்யா. ‘இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக துவக்கி உள்ளேன். நான் நடித்து வரும், தமிழ், மலையாள படங்கள் வெளிவந்தால், நயன்தாராவைப் போலவே, என்னுடைய இரண்டாவது இன்னிங்சும், அமர்க்களமாக இருக்கும்’ என்கிறார்.