விரைவில் ‘பிரேம பிரயாணம்’

தெலுங்கில், அத்தி பூத்­தாற்போல், அவ்­வப்­போது, வித்­தி­யா­ச­மான காதல் கதை­களை பட­மாக்­கு­வார்கள். அந்த வரி­சையில், இந்த படத்­தையும் சேர்த்து கொள்­ளலாம். படத்தின் ஹீரோ, மலே­சி­யாவில் பணி­யாற்­று­பவர். விடு­மு­றையில், ஊருக்கு செல்­வ­தற்­காக, மலே­சியா விமான  நிலை­யத்தில், நண்­ப­ருடன் நிற்­கிறார். அப்­போது, அங்கு வரும், ஒரு இளம் பெண் மீது, அவர் பார்வை பதி­கி­றது. அடுத்த நொடியே, அந்த பெண் மீது, காதல் வயப்­ப­டு­கிறார், ஹீரோ.  இரு­வ­ருமே, ஐத­ராபாத் விமா­னத்தில் ஒன்­றாக பய­ணிக்­கின்­றனர். இந்த பய­ணத்தின் போது நடக்கும், சுவா­ர­சி­ய­மான விஷ­யங்­களை, காதலும், கலாட்­டா­வு­மாக விளக்­கு­கி­றது, இந்த படம். மனோஜ் நந்தன் ஹீரோ­வா­கவும், நீத்து அகர்வால்  ஹீரோ­யி­னா­கவும் நடித்­துள்­ளனர்.

விரைவில் கீதாஞ்­சலி

மம்­மூட்­டியும், மோகன் லாலும் இல்­லாத மலை­யாள சினி­மாவை, இன்னும் பல ஆண்­டு­க­ளுக்கு நினைத்து கூட, பார்க்க முடி­யாது போலி­ருக்­கி­றது. இள­வட்­டங்கள் பலர், சினி­மா­வுக்கு வந்து விட்­டாலும், இவர்கள் இரு­வ­ரையும்,  இன்னும் அசைக்க முடி­ய­வில்லை. இதோ, கீதாஞ்­சலி என்ற பெயரில், மோகன் லால் நடிக்கும் அடுத்த படம், திரைக்கு வர ரெடி­யா­க­உள்­ளது. மலை­யாள ரசி­கர்­களின்  பிரி­யத்­துக்­கு­ரிய இயக்­குனர் பிரி­ய­தர்ஷன், இந்த படத்தின் மூலம், மீண்டும் களத்­துக்கு வந்­துள்ளார். இது, ஒரு அதி­ரடி ஆக் ஷன் மற்றும் த்ரில்லர் படம்.

பிரபுதேவாவை சிலையாக வடிக்கும் பாலிவுட் ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாவில் பிரபுதேவாவின் நடனத்திற்கென்றே ஒரு தனி ரசிகர் வட்டம் உண்டு. இதுவரை தனது பெயருக்கு முன்பு எந்த பட்டத்தையும் சூட்டிக்கொள்ளாத பிரபுதேவாவுக்கு அவரது ரசிகர்கள் நடன சூறாவளி என்று பட்டம் வைத்துள்ளனர். இப்படி அவருக்கென ஒரு பெரும் ரசிகர் வட்டமே தென்னிந்தியாவில் இருப்பது போல் இப்போது பாலிவுட்டிலும் பிரபுதேவாவுக்கு ரசிகர் வட்டம் உருவாகி உள்ளதாம்.

தான் இயக்கும் படங்களில் ஏதாவது பாடல்களில் தோன்றி நடனமாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருப்பதால், அவரது நடனமும் அங்கு பிரபலமாகி வருகிறதாம். அதனால் இயக்குனராக, டான்சராக பிரபுதேவாவை ரசித்து வரும் மும்பை ரசிகர்கள் ஒன்று திரண்டு அவருக்கு ஒரு மெழுகுச்சிலை உருவாக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

அதுவும் லண்டன் மியூசியத்தில் உள்ள அமிதாப்பச்சன், சச்சின், ஐஸ்வர்யாராய், ஷாரூக்கான் போன்றவர்களின் சிலைகளுக்கு இணையாக பிரபுதேவாவிற்கும் உருவாக்குகிறார்களாம். இந்த சேதியறிந்து சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போய் விட்டாராம் பிரபுதேவா. இதையடுத்து, அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, நிஜமாலுமே பாலிவுட் ரசிகர்கள் ரொம்ப பெருந்தன்மையானவர்கள்தான். அதேபோல் நானும் என் மனதில் அவர்களுக்கு பெரிய இடத்தை கொடுத்து விட்டேன் என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளாராம்

வயிற்றுக்கு வஞ்சகம் செய்ய மாட்டேன் சாப்பாட்டை ‘புல்’ கட்டு கட்டுவேன்...ஷ்ரேயா

1.சினிமாவுக்கு வந்து, 13 ஆண்டுகள் ஆகி விட்டன; எப்படி உணர்கிறீர்கள்?
நான், மிடில் கிளாஸ் பேமிலியில் இருந்து, சினிமாவுக்கு வந்த பொண்ணு. என்னை, ஒரு நடிகையாக அங்கீகரித்த மக்களுக்கு, இந்த நேரத்தில் நன்றி கூற வேண்டும். சினிமாவுக்கு வந்த புதிதில், எனக்கு அதைப் பற்றி, எதுவும் தெரியாது. இப்போது, ஓரளவுக்கு கற்றுக் கொண்டிருக்கிறேன். மரி¬யாதை, பணிவு போன்ற பல விஷயங்களை, சினிமாவிலிருந்து தான்,கற்றுக் கொண்டேன். முன்பு, கேமராவுக்கு முன் நிற்கும்போது, படபடப்பாக இருக்கும்.
இப்போது, ரொம்பவும் ரிலாக்சாக இருக்கிறேன்.
2.உங்க அம்மா, கல்லூரி பேராசிரியையாமே? சினிமாவுக்கு வராவிட்டால், டீச்சர் வேலை பார்த்திருப்பீர்களோ?
அதற்கு சான்சே இல்லை. என் தாயார், வேதியியல் பேராசிரியை. ஆனால், எனக்கு டீச்சர் வேலையில் ஆர்வம் இல்லை. இயற்கையாகவே, எனக்கு, பாரம்பரியமான நடனங்கள் மீது, ஆர்வம் அதிகம். ஓரளவு, அவற்றை தெரிந்து வைத்திருக்கிறேன். அதனால், சினிமாவுக்கு வந்திருக்காவிட்டால், கதக் நடன கலைஞராக ஆகியிருப்பேன்.
3.கோலிவுட்டிலிருந்து அடிக்கடி காணாமல் போய் விடுகிறீர்களே?
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறேன். ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை, நல்ல கதை கிடைத்தால், தமிழில் இப்போது கூட, நடிக்க ரெடி. கதைக்கும், என் கேரக்டருக்கும் தான், முக்கியத்துவம் தருகிறேனே தவிர, அதிகமான படங்களில் நடிக்க வேண்டும், பெரிய பேனர்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
4.தீபா மேத்தா, ரூபா அய்யர் போன்ற, பெண் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றுவது, உங்களுக்கு வசதியாக இருக்கிறதா?
உண்மை தான். பெண் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றும்போது, வசதியாகத் தான் இருக்கிறது. அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை, நன்கு புரிந்து கொள்ள முடியும். அதற்கு தகுந்தாற்போல், நாமும் நடிக்க முடியும். பாலிவுட்டில், டைரக்சன் மட்டுமல்லாமல், மற்ற துறைகளிலும், பெண் தொழில்நுட்ப கலைஞர்கள், அதிக அளவில் உள்ளனர். இங்கும், அந்த நிலை வர வேண்டும்.
5.உடம்பை, ரொம்பவும் ஸ்லிம்மாக வைத்துள்ளீர்களே? உணவு விஷயத்தில் பயங்கர கட்டுப்பாட்டை பின்பற்றுகிறீர்களா?
அய்யய்யோ, எப்பவுமே, நான் வயிற்றுக்கு வஞ்சகம் செய்வது இல்லை. இப்ப கூட பாருங்களேன். என், டைனிங் டேபிளில், முட்டை, தோசை, இளநீர், சாண்ட்விட்ச் என, ஒரு நடமாடும் ஓட்டலே உள்ளது. வயிறு முட்ட சாப்பிடுவேன். அதேநேரத்தில், கடுமையான உடற்பயிற்சிகள் செய்வேன். எந்த அளவுக்கு சாப்பிடுகிறேனோ, அந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்வேன்.இதுதவிர,  நீச்சல், யோகாவும் உண்டு.

தாத்தா பேரன் கதைகளுக்கு கிராக்கி

கடந்த, 2005ம் ஆண்டு, தனுஷ்-பிரியா மணி நடிப்பில், அது ஒரு கனாக்காலம் என்ற படத்தை இயக்கிய பாலு மகேந்திரா, ஏழு ஆண்டுகளுக்கு பின், தற்போது, ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். தாத்தா பேரனுக்கிடையே உள்ள உறவை மையமாக வைத்து, உருவாகியுள்ள, இப்படத்தில், பேரன் வேடத்தில்,சசிகுமார் நடித்துள்ளார். ஆனால், இதில் பாலுமகேந்திராவும், ஒரு கேரக்டரில் நடிக்கிறார். ஆனால், அது தாத்தா வேடமா? இல்லை வேறு வேடமா? என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர். மேலும்,விமல்  ராஜ்கிரண் நடித்துள்ள, ஒரு படமும் இதேபோல்,தாத்தா பேரன் உறவுகளுக்கிடையே நிகழும், பாசப்போராட்டத்தை மையப்படுத்திதான் உருவாகியுள்ளது. ராஜ்கிரண் தாத்தாவாகவும், விமல் பேரனாகவும் நடித்துள்ளனர். இந்த படங்களை தொடர்ந்து, தாத்தா  பேரன் கதைகளுக்கு கோலிவுட்டில் கிராக்கி ஏற்பட்டுள்ளது

கலைச் சேவைக்கு கிடைக்கும் கவுரவம்

இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி,சென்னையில், ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில், சினிமாவில் நீண்ட காலம் சிறப்பாக பங்களித்து வரும் கலைஞர்களுக்கும், விருது வழங்கி கவுரவிக்கன்றனராம்.அந்த பட்டியலில், தமிழ், தெலுங்கு, சினிமாக்களில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும், த்ரிஷாவின் பெயரும் இடம் பெற்றுள்ளதாம். அதனால், இந்த விழாவில் அவசியம் பங்கேற்று, விருதினை பெற்றுக் கொள்ள ஆவலாக உள்ளார், த்ரிஷா.இதுபற்றி அவர் கூறுகையில்,‘இன்றைய சினிமாவில், என்னைப் போன்ற நடிகைகள், தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவே, கடுமையாக போராட வேண்டியுள்ளது. அதனால், 10 ஆண்டு சினிமாவில் நிலைத்து நின்றதை சாதனையாக கருதி, விருது வழங்குகின்றனர். இது ரொம்ப பெருமையாகவும், இன்னும் சினிமாவில் சாதிக்க தட்டிக் கொடுப்பதை போலவும் உள்ளது’ என்கிறார் த்ரிஷா

பிந்துமாதவியின் ஐ.பி.எஸ்., ஆசை

நீர் பறவைக்கு பின், படங்கள் இல்லாமல் தவித்து வந்த விஷ்ணுவுக்கு, இப்போது புதிதாக ஒரு படம் ஒப்பந்தமாகியுள்ளது. இதில், அவருக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து வந்த படக் குழுவினர், தற்போது, தமிழ் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும், பிந்துமாதவியை புக் செய்துள்ளனர். இவர் ஏற்கனவே, நீர்ப்பறவை படத்தில் விஷ்ணுவுடன்  நடிக்க வேண்டியவர். கால்ஷீட் பிரச்னையால், அப்போது, அப்படத்திலிருந்து விலகிய பிந்துமாதவியை மீண்டும், இப்போது விஷ்ணுவுடன் இணைத்து உள்ளனர். தலைவா படத்தில் அமலா பால்  நடித்தது போன்று, இப்படத்தில் பிந்துமாதவியும், போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார். அதனால், தேசிங்கு ராஜாவுக்காக  பூசினாற்போன்று, சதை போட்ட பிந்து மாதவி, அடுத்து நடிக்கப்போவது போலீஸ் வேடம் என்பதால், உடல் எடையை குறைக்க, தினமும் ஜிம்முக்கு சென்று கொண்டிருக்கிறாராம். இந்த படம் வெளியானதும், 
‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்., விஜயசாந்தி போல், நானும், பெரிதாக பேசப்படுவேன்’ என்கிறார், பிந்து.

செந்தீ விழுந்த செம்பொற்பாறையில் மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்

கோச்சடையான் படத்தின்,இறுதிகட்ட பணிகள், வேகமாக நடக்கின்றன. படத்தின், டீசர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது. இதுவரை, கோச்சடையான் படத்தின் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்ட படக்குழு, இப்போது, அப்படத்துக்காக, வைரமுத்து எழுதிய பாடல் வரிகளையும் வெளியிட்டுள்ளனர்.‘செந்தீ விழுந்த 
செம்பொற்பாறையில், மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய், இதயம் உடலில் இருந்து விழுந்து உருண்டு புரண்டு போகுதே என, துவங்கும் அந்த பாடல், துய தமிழில் எழுதப்பட்டுள்ளதாம்.  கதைப்படி, சிறையில் வாடும், ஹீரோ ரஜினியை நினைத்து, ஹீரோயின் தீபிகா, அழுதுகொண்டே பாடுவது போல், இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த பாடல், படமாக்கப்பட்டபோது, தீபிகா, உண்மையிலேயே, அழுது விட்டாராம். அந்த அளவுக்கு, பாடல் வரிகளும், பாடல் காட்சிகளும், உண்மையான காதல் ஏக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததாம்.

தீபாவளிக்கு ‘ஆரம்பம்‘ - பொங்கலுக்கு ‘வீரம்’! அஜீத் படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

 ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக அஜீத்தின் ஆரம்பம் படம் தீபாவளிக்கும், வீரம் படம் பொங்கலுக்கும் ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பில்லா-2 படத்திற்கு பின் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜீத் மீண்டும் இணைந்துள்ள படம் இது. இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி, தெலுங்கு நடிகர் ராணா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தலைப்பே இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் முடியும் தருவாயில்தான் படத்தின் தலை‌ப்பு ஆரம்பம் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் ஆரம்பம் தலைப்பு அறிவிக்கபட்ட நாள் முதல் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஒருபுறம் அதிகரிக்க அதிகரிக்க, படத்தின் ரிலீஸ் தேதியை பற்றிய செய்திகள் பல யூகங்களாக வெளிவந்தது. இந்நிலையில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இதை பற்றி வெளியிட்ட பத்திரிகை குறிப்பில், ‘ஆரம்பம்’ அஜீத் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக இருக்கும், படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் படத்தை மெருகேற்றும் இறுதி கட்ட வேலைகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின்  இசை, மிகப் பெரிய அளவில் பேசப்படும். ஆரம்பம் படத்தின் இசை வெளியீடு குறித்த தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். இவ்வாறு ரத்னம் கூறியுள்ளார்.

இதற்கிடையே அஜீத், தனது அடுத்த படமான வீரம் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இப்படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். இப்படம் ஆரம்பிக்கும் போதே பொங்கல் விருந்தாக வீரம் இருக்கும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

ஆக, தீபாவளிக்கு ‘ஆரம்பம்’... பொங்கலுக்கு ‘வீரம்’...! மொத்தத்தில், ரசிகர்களுக்கு தல தீபாவளி - தல பொங்கல் தான்!!

பவர் ஸ்டாரின் புதிய அவதாரம்

'லத்திகா' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். என்னுடைய ஒரே போட்டி 'சூப்பர் ஸ்டார்' ரஜினிதான் என்ற ஸ்டேட்மென்ட் மூலம் ரசிகர்களிடையே பிரமலமானார்.

அதன்பின் சந்தானம் தயாரித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் கமெடி நடிகராக திகழ்ந்தார். அதனால் 'சும்மா நச்சுன்னு இருக்கு', சங்கரின் 'ஐ' போன்ற பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். நடித்துக்கொண்டிருக்கும்போது மோசடி புகார் காரணமாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

தற்போது ஜாமீனில் வெளிவந்து படங்களில் நடித்துக்கொடுத்தார். 'வட போச்சே' என்ற படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது.

அதுகுறித்து அவர் கூறியதாவது:-

பாண்டிச்சேரியில் நடந்த படப்பின்போது ரசிகர்கள் என்மீது காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. 'வட போச்சே' முழு காமெடி படமாக இருக்கும். 'கண்ணா லட்டு திண்ண ஆசையா' படத்தை காட்டிலும் காமெடி அதிகமாக இருக்கும். இந்த படத்தின் கதை கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் இரண்டு இளைஞர்களின் எளிமையான கதையாகும்.

இந்தப்படத்தில் ஒரு பாடலை என் சொந்த குரலில் பாடியுள்ளேன். அந்தப் பாடலை ரசித்து பாடியுள்ளேன். மேலும், டி.ஆர். ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ள குத்துப்பாட்டு பார்ப்பதற்கு ரசனையாக இருக்கும். படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களுக்கும் நான் நடனம் ஆடியுள்ளேன்.

இப்படத்தில் வரும் 'சூப்பர் ஸ்டார் யாரு பவர பாரு' என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தவை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனிருத் பாடும் 'ஓ பெண்ணே' இசை வீடியோ லண்டனில் படப்பிடிப்பு

தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதியின் முதல் படம் 'வணக்கம் சென்னை'. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை இளம் இசையமைப்பாளர் அனிருத் ஏற்றுள்ளார்.

ஏற்கனவே இவர் இசையமைத்த '3' படத்தின் 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் இவருக்கு உலகப்புகழை அளித்தது. இரண்டாவது படமான நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சலும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இந்த வரிசையில் 'வணக்கம் சென்னை' படப்பாடல்களின் டீசரும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் 'ஓ பெண்ணே' பாடலின் இசை வீடியோ படப்பிடிப்பிற்காக அனிருத்தும், அவரது குழுவினரும் இந்த வாரத்தில் லண்டன் செல்ல இருக்கின்றார்கள்.

மனதை மயக்கும் இந்த இனிய பாடல் கவிஞர் நா. முத்துக்குமாரால் எழுதப்பட்டு அனிருத் மற்றும் விஷால் டட்லானியால் பாடப்பட்டுள்ளது. இளவயதினரிடம் இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வெளிவரவிருக்கும் இந்தத் திரைப்படம் இசையமைப்பாளர் அனிருத்திற்கு ஒரு ஹாட்ரிக் வெற்றியைத் தரும் என்றும் திரையுலகம் தெரிவிக்கின்றது.

தகுந்த கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் நடிக்க தயார்: சுஷ்மிதா சென் அறிவிப்பு

இந்தியாவின் சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக உலக அழகி (மிஸ் யூனிவர்ஸ்) என்ற பட்டத்தை 1994ம் ஆண்டு தட்டிச் சென்றவர், சுஷ்மிதா சென்.

'தஸ்தக்' என்ற இந்தி படத்தில் நடிகையாக தடம் பதித்த சுஷ்மிதா சென், நாகார்ஜுனாவின் ஜோடியாக 'ரட்சகன்' தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் தென்னக ரசிகர்களின் தூக்கத்தை கலைத்தார்.

இதுவரை 33 படங்களில் நடித்துள்ள அவர் கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு அனில் கபூரின் ஜோடியாக 'நோ பிராப்ளம்' இந்தி படத்தில் நடித்திருந்தார்.

அதற்கு பின்னர், நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, அலிசா, ரெனீ என்ற 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்த சுஷ்மிதா சென், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், பிரபல மேக்-அப் மற்றும் சிகை அலங்கார நிபுணரான அம்பிகா பிள்ளையின் அழகு நிலையத்தின் திறப்பு விழா கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற சுஷ்மிதா சென் (37), 'இங்கிலிஷ்-விங்கிலிஷ் படத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு கிடைத்ததை போன்ற பெண்களை மையப்படுத்தும் கதாபாத்திரங்களில் தோன்றி மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன்' என்று கூறினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் அவரது ஆசை கைக்கூடலாம் என திரையுலக 'பட்சிகள்' தெரிவிக்கின்றன.

நடிகர் ஜெயராமின் சோகம்

தமிழில் முறைமாமன், பெரிய இடத்து மாப்பிள்ளை, தெனாலி, ஏகன், துப்பாக்கி போன்ற படங்களில் நடித்தவர் ஜெயராம். இவருக்கு சென்னையில் சொந்த வீடு உள்ளது. கேரளாவில் பெரிய பணக்காரர்கள் வீட்டில் யானை வளர்ப்பது சகஜம். நம்ம ஊரில் கன்னுக்குட்டி வளர்ப்பது போலதான் அவர்களுக்கு யானை வளர்ப்பதும்.

சென்னையில் யானைகள் வளர்ப்பது கடினம். இருந்தாலும் ஜெயராம் தனது வீட்டில் யானை ஒன்றை வளர்த்து வந்தார். அதற்கு கண்ணன் என பெயரிட்டு பாசத்துடன் பார்த்து வந்தார். சில விளம்பர படங்களில் அந்த யானை, ஜெயராமுடன் நடித்துள்ளது. சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த யானை இறந்துவிட்டது.

யானை இறந்த சோகத்துடன் ஜெயராம் நடமாடி வருகிறார். அவருக்கு ஆறுதல் சொல்லும் நண்பர்கள் வேறொரு யானையை வாங்கி வளருங்களேன் என்கிறார்களாம். இருந்தாலும் கண்ணன் இடத்தை வேறொரு எந்த யானையாலும் நிரப்ப முடியாது என்று கவலை கொள்கிறாராம் அவர்.

அஜீத் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளிவருகிறது ‘ஆரம்பம்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்த ‘ஆரம்பம்’ படத்தின் தலைப்பு அறிவிக்கபட்ட நாள் முதல் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை பற்றிய செய்திகள் பல யூகங்களாக வெளிவந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், ‘ஆரம்பம்’ படத்தை தீபாவளிக்கு வெளியிடப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் கூறியிருப்பதாவது:-

'ஆரம்பம்’ அஜீத் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக இருக்கும். படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் படத்தை மெருகேற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மிகப்பெரிய அளவில் பேசப்படும். ‘ஆரம்பம்’ படத்தின் இசை வெளியீடு குறித்து செய்தி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தீபாவளிக்கு இப்படம் வெளியாகவிருப்பதால், இப்படத்தைத் தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் ‘வீரம்’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. எது, எப்படியிருந்தாலும் அஜீத் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி 'தல’ தீபாவளிதான்

மகேஷ்பாபுவுக்கு ஜோடியாகும் ராஞ்சனா பட நாயகி சோனம்கபூர்!

தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சோனம் கபூர். இந்தி நடிகர் அனில் கபூரின் மகளான இவர், ராஞ்சனா படத்திற்கு பிறகு தொடர்ந்து தனுசுடன் நடிக்க விரும்பினார். அவர் மூலமாக தமிழிலும் வந்து கொடி நாட்ட வேண்டும் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். ஆனால், அவரது வடக்கத்திய முகம் தென்னிந்திய சினிமாவுக்கு எடுபடாது என்று கருதி எந்த தமிழ் இயக்குனரும் அவருக்கு சான்ஸ் கொடுக்கவில்லை.

இருப்பினும், தனுஷ் தனது புதிய தமிழ் படங்களில் நடிக்க தன்னை அழைப்பார் என்று எதிர்பார்த்தார் சோனம்கபூர். ஆனால் அனேகன் படத்துக்குகூட அமீரா என்ற வேறொரு இந்தி நடிகையை அவர் புக் பண்ணியதால், தமிழை அதிகமாக நம்பாமல் தெலுங்கு, கன்னடம் என்று முயற்சி எடுத்தார். அந்த முயற்சியின் பலனாக தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் படவாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதாம்.

அதனால், இந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவரான சோனம்கபூர், இப்போது தெலுங்கு வார்த்தைகளின் அர்த்தங்களையும் ஒரு ஆசிரியரை நியமித்து தெரிந்து கொண்டு வருகிறாராம். சோனம் கபூரின் இந்த ஆர்வம் மகேஷ்பாபுவுக்கு பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளதாம். அதனால் அடுத்தடுத்து தெலுங்கில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்றும் அவரை கேட்டுக்கொண்டுள்ளாராம்

நான் ஹீரோ அல்ல; கதைதான் ஹீரோ! விஜயசேதுபதி

தொடர்ச்சியாக மூன்று ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தவர் விஜயசேதுபதி. இப்போது கைநிறைய படங்களை வைத்திருக்கிறார். அதோடு தான் நடிக்கிற படங்களில் தனக்கு இணையான வேடங்களை புதிதாக வரும் நடிகர்களுக்கு கொடுத்தாலும் அவர் ஆட்சேபணை தெரிவிப்பதில்லை. என்னுடைய கேரக்டர் எனக்கு பிடித்திருக்கிறது. நான் நடிக்கிறேன் என்கிறார்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ‘‘எது நல்ல சினிமா என்பதை கதைதான் தீர்மானிக்கிறது. அதில் நடிப்பவர்கள் பொம்மைகள்தான். அப்படி நானும் ஒரு பொம்மையாக செயல்படுகிறேன்,’’ என்று சொல்லும் விஜயசேதுபதி, என்னிடம் கதை சொல்ல இயக்குனர்கள் வரும்போது, அதில் நானே முதன்மையானவனாக இருக்க வேண்டும் என்றும் நான் நினைப்பதில்லை.

என்னுடன் நடிக்கிற ஒவ்வொரு கேரக்டரும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்போதுதான், அவர்களுடன் போட்டி போட்டு நடிக்க முடியும். என்னைச்சுற்றியுள்ள கேரக்டர்கள் சரியாக நடிக்கவில்லையெனறால், எனது நடிப்பும் எடுபடாது. அதனால் நல்ல திறமையான நடிகர்கள் என்னுடன் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று செல்லும் சேதுபதி, இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் ஹீரோ என்பதை மனதில் கொள்ள மாட்டேன். கதை மட்டுமே ஹீரோ. அந்த கதைக்குள் நானும் ஒரு கேரக்டர் அவ்வளவுதான் என்கிறார்

அமலாபாலின் ரஜினி கனவு!

தற்போது பீல்டுக்கு வரும் நடிகைகளுக்கெல்லாம் விஜய், அஜீத்தான் டார்கெட்டாக உள்ளது. அந்தவகையில், தலைவா மூலம் விஜய்யுடன் டூயட் பாடிவிட்ட அமலாபால், அடுத்து தனுசுடன் நடிப்பவர், அதற்கடுத்தபடியாக அஜீத், சூர்யா என்று ஜோடி போட ஆசைப்படுகிறார். இதற்கிடையே ரஜினி படத்தில் ஒரு சிறிய வேடம் கிடைத்தாலும் நடித்து விட வேண்டும் என்கிற ஆசையும் இப்போது அவருக்குள் புதிதாக முளை விட்டுள்ளதாம்.

அதுகுறித்த முயற்சிகளை அவர் எடுக்க முற்பட்டபோது, ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் அதிர்ஷ்டம் வேண்டும். ஏனென்றால், அந்த வாய்ப்பு த்ரிஷா, சிம்ரன் போன்ற நடிகைகளுக்கெல்லாம் கிடைக்கவே இல்லை. பல வருடங்களாக முயற்சித்த அவர்களாலேயே முடியவில்லை என்று கூறினார்களாம்.

அதற்கு, முடியாது என்று நினைத்தால் முடியாதுதான். முடியும் என்று பாசிட்டிவாக நினைத்து பாருங்கள் கண்டிப்பாக முடியும். நான்கூட விஜய்யுடன் இத்தனை சீக்கிரத்தில் நடிக்க முடியும் என்று நினைக்கவில்லை. அதற்காக நான் முயற்சியை கைவிடவில்லை. அப்படி எடுத்த முயற்சிதான் என்னை இப்போது விஜய்யுடன் நடிக்க வைத்துள்ளது. அதனால் முயற்சியை மட்டும் விடக்கூடாது என்று தனது மேனேஜர்களை ரஜினி வட்டாரத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள வலியுறுத்தி வருகிறாராம்.

இதற்கிடையே ஏதாவது சினிமா விழாக்களில் ரஜினியை சந்திக்க நேர்ந்தாலும் தனக்குள் இருக்கும் ஆசையை கொட்டி விட வேண்டும் என்றும் நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறாராம் அமலாபால்

எமியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது நீச்சல் பயிற்சிதானாம்!

நம்ம ஊர் நடிகைகளெல்லாம் உடம்பில் சதை போட்டு விட்டால் உடனே ஜிம்முக்கு சென்று மணிக்கணக்கில் வியர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி செய்வது, இரும்பு கம்பிகளை தூக்கி மல்லுக்கட்டுவது என்றெல்லாம் உடல் எடையை குறைக்க மன்றாடுவார்கள். ஆனால், ஹாலிவுட் நடிகையான மதராசப்பட்டினம் எமி ஜாக்சன், மழைக்குகூட ஜிம் பக்கம் ஒதுங்கினதில்லையாம்.

பிறகெப்படி உடம்பு இப்படி செதுக்கி எடுத்த சிற்பம் போலிருக்கிறது? என்று கேட்டால், அதற்கு காரணம், ஜிம் பயிற்சி இல்லை. என்னுடைய உணவுக்கட்டுப்பாடுதான். தினமும் காலை எழுந்ததும் அரை லிட்டர் தண்ணி குடித்தபடி நாளை தொடங்கும் நான், பின்னர் ஜூஸ் மட்டுமே குடித்து விட்டு, எனது பேவரிட் விளையாட்டுகளான ஹாக்கி, கால்பந்து என்று எதையாவது சில மணி நேரங்கள் விளையாடுவேன்.

அதன்பிறகு நீச்சல் குளத்துக்கு சென்று ஹாயாக நீந்திக்குளிப்பேன். அதில் எனது உடம்பில் ஏற்பட்ட அசதி மட்டுமின்றி, அனைத்து உறுப்புகளும் வேலை செய்யும். இப்படி குறைந்தது ஒரு மணி நேரமாவது நான் தினமும் நீந்திக்குளிப்பதை கடைபிடித்து வருகிறேன் என்று சொல்லும் எமி எனது உடம்பு மீன் மாதிரி வழவழப்பாக, ஸ்லிம்மாக இருக்கிறதென்றால் இதுதான் காரணம் என்கிறார்.

மேலும் மதியம், இரவு நேரங்களில் உடம்பில் சதை போடாத மீன் மற்றும் அசைவ உணவுகளையும் எடுத்துக்கொள்வதாக சொல்லும் எமி, இரவில் படுக்கைக்கு தூங்கச்செல்லும்போது பால் தவிர வேறு எந்த திரவ அயிட்டங்களையும் எடுத்துக்கொள்வதில்லையாம்., அவர் உடம்பு அழகாக, ஆரோக்யமாக இருப்பதற்கு இதுதான் காரணமாம்

ஓவி­யாவும், பிந்து மாத­வியும் என் தோழிகள் - விமல் ‌பேட்டி!!

தமிழ் சினிமாவின் பட்ஜெட் தயாரிப்பாளர்களின் மோஸ்ட் வான்ட்டடு ஹீரோ யார் என்றால் அதில் முதலிடம் பெறுபவர் விமல் தான். களவாணி படத்தின் மூலம் பிரபலமான விமல், தொடர்ந்து தூங்காநகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது எழில் இயக்கத்தில் ‌இவர் நடித்து வெளிவந்து இருக்கும் தேசிங்கு ராஜாவும் விமலுக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இதுதவிர அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வரும் விமல் அளித்த சிறப்பு பேட்டி...

* எந்த மாதிரி கதைகளுக்கு முதலிடம் தருகிறீர்கள்?

சீரியசான கதையாக இருந்தாலும், அதை, சிரிக்கும்படியாக வெளிப்படுத்தக் கூடிய கதைகளுக்கே, முதலிடம் கொடுக்கிறேன். ஏனென்றால், இப்போதைய ரசிகர்கள், இரண்டரை மணிநேரம் மனம்விட்டு சிரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான், தியேட்டருக்கு வருகின்றனர். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என,  நினைக்கிறேன்.

* ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோக்களுடன் நடிக்க தயங்குவதாக தெரிகிறதே?

அப்படியெல்லாம் எதுவுமில்லை. கதையில், என் கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருந்தால், எந்த படத்தையும் தவிர்ப்பதில்லை. என்னுடன் நடிக்கும் மற்ற ஹீரோக்களும், சிறப்பாக  நடிக்க வேண்டுமென்று,  விட்டுக்  கொடுக்கும் மனநிலை கொண்டவன், நான். அதனால், எனக்கு யார் மீதும், வெறுப்பு கிடையாது.

* முதலில், ஓவியா, இப்போது பிந்து மாதவி என, கிசுகிசுக்களில்  தொடர்ந்து சிக்குகிறீர்களே?

கிசுகிசுக்கள் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டன. ‘களவாணி, கலகலப்பு, சில்லென்று ஒரு சந்திப்பு’படங்களில் நடித்தபோது,  ஓவியாவுடன் இணைத்து பரவிய அதே கிசுகிசு, இப்போது, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா’வுக்கு பின், அப்படங்களில் என்னுடன் நடித்த பிந்து மாதவியை இணைத்து பரவியுள்ளது. ஆனால்,  இவர்கள் இருவருமே, எனக்கு நல்ல தோழிகள் தான். சக நடிகைகள் என்ற நட்பை தவிர, எங்களுக்குள் வேறு எதுவுமில்லை.

* வினுசக்கரவர்த்தி, உங்களை ஜூனியர் ஜெமினி கணேசன் என்று கூறியுள்ளாரே?

வினுசக்கரவர்த்தி சார் ரொம்ப பெரிய நடிகர். அவருக்கு, ‘தேசிங்கு ராஜா’ 1000வது படம். அப்படிப்பட்ட ஒரு நடிகரின் வாயிலிருந்து, இப்படியொரு வார்த்தை வர, நான்  கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்னை, ‘ஜூனியர் ஜெமினி’ என்று அவர் கூறியதற்கு ரொம்ப பெருமைப்படுகிறேன்.

* படத்துக்கு படம், நீங்கள் சம்பளத்தை உயர்த்துவதாக புகார் வருகிறதே?

எந்த படத்திற்கும், இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று, நான் கேட்பதில்லை. தயாரிப்பாளர்கள் தான், இப்போது வரை, என் சம்பளத்தை நிர்ணயித்து வருகின்றனர். இது என்னை வைத்து படம் எடுப்பவர்களுக்கு தெரியும்.

மீண்டும் வருகிறார்அனன்யா

நாடோடிகள்’ படத்தில் அறிமுகமான அனன்யாவுக்கு, அதன்பின் நடித்த, ‘எங்கேயும் எப்போதும்’ படமும் திருப்புமுனையாக அமைந்தது. இருப்பினும், பைனான்சியர்  ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். இதையடுத்து, படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இப்போது, சிறிய இடைவெளிக்கு பின், மீண்டும் வெள்ளித் திரைக்கு அடி எடுத்து வைத்துள்ளார், அனன்யா. தற்போது, ஒரு மலையாள படத்தில் நடித்து வரும் அனன்யாவுக்கு, தமிழிலும்,  ‘அங்காடி தெரு’ மகேஷ் நடிக்கும் படத்தில் ஹீரோயின் வேடம் கிடைத்து உள்ளது. அதுவும், கல்லூரி மாணவி வேடமாம். அதனால், இப்படத்துக்காக, ஒரு ரூபாய்  மட்டுமே, அட்வான்சாக வாங்கி, நடிக்க துவங்கி விட்டார் அனன்யா. ‘இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக துவக்கி உள்ளேன். நான் நடித்து வரும், தமிழ், மலையாள  படங்கள் வெளிவந்தால், நயன்தாராவைப் போலவே, என்னுடைய இரண்டாவது இன்னிங்சும், அமர்க்களமாக இருக்கும்’ என்கிறார்.

மம்மூட்டி அம்மாவாக நடிக்கிறார் மீனா

அன்­புள்ள ரஜி­னிகாந்த்’ படத்தில் குட்டி பெண்­ணாக நடித்த மீனா, தமிழ், தெலுங்கு, மலை­யாள சினி­மாவில் முக்­கிய முன்­னணி நடி­கை­யாக பல ஆண்­டுகள் வலம் வந்தார். சில ஆண்­டு­க­ளுக்கு முன், திரு­மணம் செய்து கொண்ட மீனா, ‘தம்பி கோட்டை’ படம் மூலம், ‘ரீ - என்ட்ரி’ கொடுத்தார். சின்­னத்­திரை நிகழ்ச்­சி­களில், நடு­வ­ராக பங்­கேற்று வந்த மீனாவை,  இப்­போது மலை­யாள சினிமா அர­வ­ணைத்­துள்­ளது.மோகன்­லால் ஜோடி­யாக, இப்­போது அவர் நடிக்கும், ‘திரி­ஷயம்’ படத்தில்,  இரண்டு குழந்­தைகளுக்கு அம்­மா­வாக நடிக்­கிறார். `பால்­ய­கால சசி’ என்ற படத்தில், மம்­மூட்­டிக்கே அம்­மா­வாக நடிக்­கிறார் மீனா. இதை­ய­டுத்து,  தமிழ் திரைப்­பட தயா­ரிப்­பா­ளர்­களும், அம்மா வேடத்­துக்­காக, மீனாவை அணு­கி­யுள்­ளனர்.