தெலுங்கில், அத்தி பூத்தாற்போல், அவ்வப்போது, வித்தியாசமான காதல் கதைகளை படமாக்குவார்கள். அந்த வரிசையில், இந்த படத்தையும் சேர்த்து கொள்ளலாம். படத்தின் ஹீரோ, மலேசியாவில் பணியாற்றுபவர். விடுமுறையில், ஊருக்கு செல்வதற்காக, மலேசியா விமான நிலையத்தில், நண்பருடன் நிற்கிறார். அப்போது, அங்கு வரும், ஒரு இளம் பெண் மீது, அவர் பார்வை பதிகிறது. அடுத்த நொடியே, அந்த பெண் மீது, காதல் வயப்படுகிறார், ஹீரோ. இருவருமே, ஐதராபாத் விமானத்தில் ஒன்றாக பயணிக்கின்றனர். இந்த பயணத்தின் போது நடக்கும், சுவாரசியமான விஷயங்களை, காதலும், கலாட்டாவுமாக விளக்குகிறது, இந்த படம். மனோஜ் நந்தன் ஹீரோவாகவும், நீத்து அகர்வால் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
TamilNadu | News | Daily Update
விரைவில் கீதாஞ்சலி
மம்மூட்டியும், மோகன் லாலும் இல்லாத மலையாள சினிமாவை, இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைத்து கூட, பார்க்க முடியாது போலிருக்கிறது. இளவட்டங்கள் பலர், சினிமாவுக்கு வந்து விட்டாலும், இவர்கள் இருவரையும், இன்னும் அசைக்க முடியவில்லை. இதோ, கீதாஞ்சலி என்ற பெயரில், மோகன் லால் நடிக்கும் அடுத்த படம், திரைக்கு வர ரெடியாகஉள்ளது. மலையாள ரசிகர்களின் பிரியத்துக்குரிய இயக்குனர் பிரியதர்ஷன், இந்த படத்தின் மூலம், மீண்டும் களத்துக்கு வந்துள்ளார். இது, ஒரு அதிரடி ஆக் ஷன் மற்றும் த்ரில்லர் படம்.
பிரபுதேவாவை சிலையாக வடிக்கும் பாலிவுட் ரசிகர்கள்!
தென்னிந்திய சினிமாவில் பிரபுதேவாவின் நடனத்திற்கென்றே ஒரு தனி ரசிகர் வட்டம் உண்டு. இதுவரை தனது பெயருக்கு முன்பு எந்த பட்டத்தையும் சூட்டிக்கொள்ளாத பிரபுதேவாவுக்கு அவரது ரசிகர்கள் நடன சூறாவளி என்று பட்டம் வைத்துள்ளனர். இப்படி அவருக்கென ஒரு பெரும் ரசிகர் வட்டமே தென்னிந்தியாவில் இருப்பது போல் இப்போது பாலிவுட்டிலும் பிரபுதேவாவுக்கு ரசிகர் வட்டம் உருவாகி உள்ளதாம்.
தான் இயக்கும் படங்களில் ஏதாவது பாடல்களில் தோன்றி நடனமாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருப்பதால், அவரது நடனமும் அங்கு பிரபலமாகி வருகிறதாம். அதனால் இயக்குனராக, டான்சராக பிரபுதேவாவை ரசித்து வரும் மும்பை ரசிகர்கள் ஒன்று திரண்டு அவருக்கு ஒரு மெழுகுச்சிலை உருவாக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
அதுவும் லண்டன் மியூசியத்தில் உள்ள அமிதாப்பச்சன், சச்சின், ஐஸ்வர்யாராய், ஷாரூக்கான் போன்றவர்களின் சிலைகளுக்கு இணையாக பிரபுதேவாவிற்கும் உருவாக்குகிறார்களாம். இந்த சேதியறிந்து சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போய் விட்டாராம் பிரபுதேவா. இதையடுத்து, அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, நிஜமாலுமே பாலிவுட் ரசிகர்கள் ரொம்ப பெருந்தன்மையானவர்கள்தான். அதேபோல் நானும் என் மனதில் அவர்களுக்கு பெரிய இடத்தை கொடுத்து விட்டேன் என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளாராம்
தான் இயக்கும் படங்களில் ஏதாவது பாடல்களில் தோன்றி நடனமாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருப்பதால், அவரது நடனமும் அங்கு பிரபலமாகி வருகிறதாம். அதனால் இயக்குனராக, டான்சராக பிரபுதேவாவை ரசித்து வரும் மும்பை ரசிகர்கள் ஒன்று திரண்டு அவருக்கு ஒரு மெழுகுச்சிலை உருவாக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
அதுவும் லண்டன் மியூசியத்தில் உள்ள அமிதாப்பச்சன், சச்சின், ஐஸ்வர்யாராய், ஷாரூக்கான் போன்றவர்களின் சிலைகளுக்கு இணையாக பிரபுதேவாவிற்கும் உருவாக்குகிறார்களாம். இந்த சேதியறிந்து சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போய் விட்டாராம் பிரபுதேவா. இதையடுத்து, அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, நிஜமாலுமே பாலிவுட் ரசிகர்கள் ரொம்ப பெருந்தன்மையானவர்கள்தான். அதேபோல் நானும் என் மனதில் அவர்களுக்கு பெரிய இடத்தை கொடுத்து விட்டேன் என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளாராம்
வயிற்றுக்கு வஞ்சகம் செய்ய மாட்டேன் சாப்பாட்டை ‘புல்’ கட்டு கட்டுவேன்...ஷ்ரேயா
1.சினிமாவுக்கு வந்து, 13 ஆண்டுகள் ஆகி விட்டன; எப்படி உணர்கிறீர்கள்?
நான், மிடில் கிளாஸ் பேமிலியில் இருந்து, சினிமாவுக்கு வந்த பொண்ணு. என்னை, ஒரு நடிகையாக அங்கீகரித்த மக்களுக்கு, இந்த நேரத்தில் நன்றி கூற வேண்டும். சினிமாவுக்கு வந்த புதிதில், எனக்கு அதைப் பற்றி, எதுவும் தெரியாது. இப்போது, ஓரளவுக்கு கற்றுக் கொண்டிருக்கிறேன். மரி¬யாதை, பணிவு போன்ற பல விஷயங்களை, சினிமாவிலிருந்து தான்,கற்றுக் கொண்டேன். முன்பு, கேமராவுக்கு முன் நிற்கும்போது, படபடப்பாக இருக்கும்.
இப்போது, ரொம்பவும் ரிலாக்சாக இருக்கிறேன்.
இப்போது, ரொம்பவும் ரிலாக்சாக இருக்கிறேன்.
2.உங்க அம்மா, கல்லூரி பேராசிரியையாமே? சினிமாவுக்கு வராவிட்டால், டீச்சர் வேலை பார்த்திருப்பீர்களோ?
அதற்கு சான்சே இல்லை. என் தாயார், வேதியியல் பேராசிரியை. ஆனால், எனக்கு டீச்சர் வேலையில் ஆர்வம் இல்லை. இயற்கையாகவே, எனக்கு, பாரம்பரியமான நடனங்கள் மீது, ஆர்வம் அதிகம். ஓரளவு, அவற்றை தெரிந்து வைத்திருக்கிறேன். அதனால், சினிமாவுக்கு வந்திருக்காவிட்டால், கதக் நடன கலைஞராக ஆகியிருப்பேன்.
3.கோலிவுட்டிலிருந்து அடிக்கடி காணாமல் போய் விடுகிறீர்களே?
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறேன். ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை, நல்ல கதை கிடைத்தால், தமிழில் இப்போது கூட, நடிக்க ரெடி. கதைக்கும், என் கேரக்டருக்கும் தான், முக்கியத்துவம் தருகிறேனே தவிர, அதிகமான படங்களில் நடிக்க வேண்டும், பெரிய பேனர்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
4.தீபா மேத்தா, ரூபா அய்யர் போன்ற, பெண் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றுவது, உங்களுக்கு வசதியாக இருக்கிறதா?
உண்மை தான். பெண் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றும்போது, வசதியாகத் தான் இருக்கிறது. அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை, நன்கு புரிந்து கொள்ள முடியும். அதற்கு தகுந்தாற்போல், நாமும் நடிக்க முடியும். பாலிவுட்டில், டைரக்சன் மட்டுமல்லாமல், மற்ற துறைகளிலும், பெண் தொழில்நுட்ப கலைஞர்கள், அதிக அளவில் உள்ளனர். இங்கும், அந்த நிலை வர வேண்டும்.
5.உடம்பை, ரொம்பவும் ஸ்லிம்மாக வைத்துள்ளீர்களே? உணவு விஷயத்தில் பயங்கர கட்டுப்பாட்டை பின்பற்றுகிறீர்களா?
அய்யய்யோ, எப்பவுமே, நான் வயிற்றுக்கு வஞ்சகம் செய்வது இல்லை. இப்ப கூட பாருங்களேன். என், டைனிங் டேபிளில், முட்டை, தோசை, இளநீர், சாண்ட்விட்ச் என, ஒரு நடமாடும் ஓட்டலே உள்ளது. வயிறு முட்ட சாப்பிடுவேன். அதேநேரத்தில், கடுமையான உடற்பயிற்சிகள் செய்வேன். எந்த அளவுக்கு சாப்பிடுகிறேனோ, அந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்வேன்.இதுதவிர, நீச்சல், யோகாவும் உண்டு.
தாத்தா பேரன் கதைகளுக்கு கிராக்கி
கடந்த, 2005ம் ஆண்டு, தனுஷ்-பிரியா மணி நடிப்பில், அது ஒரு கனாக்காலம் என்ற படத்தை இயக்கிய பாலு மகேந்திரா, ஏழு ஆண்டுகளுக்கு பின், தற்போது, ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். தாத்தா பேரனுக்கிடையே உள்ள உறவை மையமாக வைத்து, உருவாகியுள்ள, இப்படத்தில், பேரன் வேடத்தில்,சசிகுமார் நடித்துள்ளார். ஆனால், இதில் பாலுமகேந்திராவும், ஒரு கேரக்டரில் நடிக்கிறார். ஆனால், அது தாத்தா வேடமா? இல்லை வேறு வேடமா? என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர். மேலும்,விமல் ராஜ்கிரண் நடித்துள்ள, ஒரு படமும் இதேபோல்,தாத்தா பேரன் உறவுகளுக்கிடையே நிகழும், பாசப்போராட்டத்தை மையப்படுத்திதான் உருவாகியுள்ளது. ராஜ்கிரண் தாத்தாவாகவும், விமல் பேரனாகவும் நடித்துள்ளனர். இந்த படங்களை தொடர்ந்து, தாத்தா பேரன் கதைகளுக்கு கோலிவுட்டில் கிராக்கி ஏற்பட்டுள்ளது
கலைச் சேவைக்கு கிடைக்கும் கவுரவம்
இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி,சென்னையில், ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில், சினிமாவில் நீண்ட காலம் சிறப்பாக பங்களித்து வரும் கலைஞர்களுக்கும், விருது வழங்கி கவுரவிக்கன்றனராம்.அந்த பட்டியலில், தமிழ், தெலுங்கு, சினிமாக்களில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும், த்ரிஷாவின் பெயரும் இடம் பெற்றுள்ளதாம். அதனால், இந்த விழாவில் அவசியம் பங்கேற்று, விருதினை பெற்றுக் கொள்ள ஆவலாக உள்ளார், த்ரிஷா.இதுபற்றி அவர் கூறுகையில்,‘இன்றைய சினிமாவில், என்னைப் போன்ற நடிகைகள், தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவே, கடுமையாக போராட வேண்டியுள்ளது. அதனால், 10 ஆண்டு சினிமாவில் நிலைத்து நின்றதை சாதனையாக கருதி, விருது வழங்குகின்றனர். இது ரொம்ப பெருமையாகவும், இன்னும் சினிமாவில் சாதிக்க தட்டிக் கொடுப்பதை போலவும் உள்ளது’ என்கிறார் த்ரிஷா
பிந்துமாதவியின் ஐ.பி.எஸ்., ஆசை
நீர் பறவைக்கு பின், படங்கள் இல்லாமல் தவித்து வந்த விஷ்ணுவுக்கு, இப்போது புதிதாக ஒரு படம் ஒப்பந்தமாகியுள்ளது. இதில், அவருக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து வந்த படக் குழுவினர், தற்போது, தமிழ் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும், பிந்துமாதவியை புக் செய்துள்ளனர். இவர் ஏற்கனவே, நீர்ப்பறவை படத்தில் விஷ்ணுவுடன் நடிக்க வேண்டியவர். கால்ஷீட் பிரச்னையால், அப்போது, அப்படத்திலிருந்து விலகிய பிந்துமாதவியை மீண்டும், இப்போது விஷ்ணுவுடன் இணைத்து உள்ளனர். தலைவா படத்தில் அமலா பால் நடித்தது போன்று, இப்படத்தில் பிந்துமாதவியும், போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார். அதனால், தேசிங்கு ராஜாவுக்காக பூசினாற்போன்று, சதை போட்ட பிந்து மாதவி, அடுத்து நடிக்கப்போவது போலீஸ் வேடம் என்பதால், உடல் எடையை குறைக்க, தினமும் ஜிம்முக்கு சென்று கொண்டிருக்கிறாராம். இந்த படம் வெளியானதும்,
‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்., விஜயசாந்தி போல், நானும், பெரிதாக பேசப்படுவேன்’ என்கிறார், பிந்து.
‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்., விஜயசாந்தி போல், நானும், பெரிதாக பேசப்படுவேன்’ என்கிறார், பிந்து.
Subscribe to:
Comments (Atom)






